MEDIA STATEMENTNATIONAL

மித்ரா நிதி முறையாக B 40 பிரிவுக்கு செலவிடப் படுகிறது.

செய்தி ; சு.  சுப்பையா
சுங்கைபூலோ.நவ.19- மித்ராவிக்கு இவ்வாண்டு ஒதுக்கப் பட்ட  ரி.ம. 100 மில்லியன் முறையாக மலேசிய இந்திய சமுதாயத்தின் B 40 பிரிவை சேர்ந்தவர்களின் மேம்பாட்டுக்கு சென்றடைந்தது. அதிலும் பெரும்பான்மையாக வசதி குறைந்த இந்திய சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டுக்காக செலவிடப் பட்டது.
பாலர் பள்ளி, ஆரம்ப பள்ளி, இடை நிலைப் பள்ளி, உயர்கல்வி என எல்லா தரப்பை சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு முறையாக செலவிடப் பட்டது.
மித்ரா நிதி நிர்வாகம் நியாயமாக பிரதமர் கண்காணிப்பின் கீழ் செயல் படுகிறது என்று அதன் தலைவர் டத்தோ இரமணன் சுங்கை பூலோ நாடாளு மன்ற தீபாவளி திறந்த இல்ல உசரிப்பிப் கலந்துக் கொண்ட போது பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இந்நிதி முறையாக கையாளப் படுகிறது. மா நகர் பகுதியில் வாழும் இந்திய குடும்பங்களின் வறுமை போக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் வறுமையில் வாழும் இந்தியர்களின் மேம்பாட்டுக்காக மித்ரா முக்கியத்துவம் கொடுத்தது. 100 மில்லியன் நிதியும் முறையாகவும் கவனமாகவும் கையாளப் படுகிறது என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொறுமையுடன் பதில் அளித்தார்.
இது வரையில் 62 மில்லியன் ரிங்கிட் பகீர்ந்து அளிக்கப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Pengarang :