NATIONAL

இமயம் வென்ற சாதனையாளர், ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளி தலைமையாசிரியர் டத்தோ மகேந்திரன் பணி ஓய்வு பெற்றார்

ஷா ஆலம், டிச 1- உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் மலையின் உச்சியை
அடைந்து சாதனைப் படைத்த முதலாவது மலேசியரான டத்தோ எம்.
மகேந்திரன் ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியின் தலைமையாரியர்
பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெறுகிறார்.

கடந்த 1997ஆம் ஆண்டு அதாவது 26 ஆண்டுகளுக்கு முன்னர் 8,850 மீட்டர்
உயரம் கொண்ட இமயமலையின் உச்சம் தொட்டு தேசிய கொடியைப்
பறக்கவிட்ட பெருமை டத்தோ மகேந்திரனைச் சேரும்.

இந்த வியக்கத்தக்க சாதனையைப் புரிந்த அவர், கடந்த 35 ஆண்டுகளாக
ஆசிரியராகவும் பள்ளி மாணவர்களின் உற்றத் தோழனாகவும் விளங்கி
வருகிறார். ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியில்
அண்மைய சில ஆண்டுகளாகத் தலைமையாரியராகப் பணியாற்றி வந்த
டத்தோ மகேந்திரன் வரும் டிசம்பர் 6ஆம் தேதியுடன் கட்டாய பணி ஓய்வு
பெறுகிறார்.

பணி ஓய்வு பெறும் மகேந்திரனை கௌரவிக்கும் விதமாக நேற்று
பள்ளியில் பிரியாவிடை நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
திரளாகக் கலந்து சிறப்பித்தனர்.


Pengarang :