NATIONAL

அர்ச்சகர்களுக்கும் சொக்சோ பாதுகாப்பு- அமைச்சர் சிவகுமார் தகவல்

கோலாலம்பூர் டிச 4 – சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் இனிமேல் அர்ச்சகர்களும் இடம் பெறுவார்கள் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

சொந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மீனவர்கள், விவசாயிகள்  இதில் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் சமயப் பணியில் ஈடுபட்டுள்ள அர்ச்சகர்கள் இடம் பெறும் வகையில் சமயம் என்ற வார்த்தை சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் இடம் பெற உதவி புரியும் படி மலேசிய குருக்கள் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ பிரகலாதன் குருக்கள் மனிதவள அமைச்சர் சிவகுமாரிடம் கோரிக்கையை முன் வைத்தார்.

இந்த கோரிக்கையை உடனடியாக பரீசிலித்த அமைச்சர் சிவகுமார் சொக்சோ திட்டத்தில் அர்ச்சகர்களும் இனிமேல் இடம் பெறுவார்கள் என்று சொன்னார்.

மலேசிய குருக்கள் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய குருக்கள் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு விழாவில் முறையாக ஆகமமுறைபடி      பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் தலையில் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


Pengarang :