NATIONAL

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தால் எவ்வாறு சீர்திருத்தத்தை அமல்படுத்துவது- அஸாலினா கேள்வி

ஷா ஆலம், டிச 4 – அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாக எதிர்க்கட்சிகள்
தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தால் அரசியலமைப்புச் சட்டத்தில்
திருத்தங்கள் தேவைப்படக்கூடிய அரசியலமைப்பு சீர்த்திருத்தங்களை
எவ்வாறு அமல் செய்வது என டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான்
கேள்வியெழுப்பினார்.

பொறுப்பற்றத் தரப்பினர் நிலைத்தன்மையற்ற சூழலை உருவாக்க
முயன்று வருவதாகப் பிரதமர் துறை (சட்டம் மற்றும் அரசியலமைப்புச்
சீர்திருத்தம்) அமைச்சரான அவர் மேலவையில் தெரிவித்தார்.

ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கம்
தொடர்ந்து அச்சுறுத்தல்களைப் பெற்று வந்தால் பெரிய அளவிலான
அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களை அமல் செய்வதற்கு ஏதுவாக 148
உறுப்பினர்களின் ஆதரவை எப்படி பெற முடியும் என அவர் வினவினார்.

நம்மிடம் 148 உறுப்பினர்களின் ஆதரவு இருந்த போதிலும் எந்த
நேரத்திலும் ஆட்சிக் கவிழ்க்கப்படலாம் என்ற ஆருடங்கள் தொடர்ந்து
வெளியிடப்பட்டு வருகின்றன.

அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியலமைப்புச்
சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது அவசியமாகும். அரசாங்கம்
வலுவின்றி காணப்பட்டால் இந்த சீர்திருத்தங்களை நாம் அமல்படுத்த
இயலாது என்றார் அவர்.

சட்டத் துறைத் தலைவர் மற்றும் பப்ளிக் புரோசிகியூட்டருக்கும்
இடையிலான அதிகாரத்தை பிரிப்பதற்கான காலக் கெடு தொடர்பில்
விளக்கம் கோரியுள்ள்யுள்ளதாக மேலவையில் துணைக் கேள்விக்குப்
பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மூன்றில் இரு மடங்கு
உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனக் கூறிய அவர், இந்த திருத்தம்
நடப்பிலுள்ள 19 சட்டங்களை உட்படுத்தியுள்ளது என்றார்.


Pengarang :