SELANGOR

கோல்ஃப் விளையாட்டு மற்றும் மருத்துவ சுற்றுலாப் பேக்கஜைச் சுற்றுலா சிலாங்கூர் அறிமுகப்படுத்தவுள்ளது

பெட்டாலிங் ஜெயா, டிச 4: அடுத்த ஆண்டு “சிலாங்கூருக்கு வருகை தரும்“ ஆண்டை
முன்னிட்டு, கோல்ஃப் விளையாட்டு மற்றும் மருத்துவ சுற்றுலாப் பேக்கஜைச் சுற்றுலா
சிலாங்கூர் அறிமுகப்படுத்தவுள்ளது.

இரண்டு வகைகளையும் இணைக்கும் பேக்கஜ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்கும் என“ஃபோகஸ் டூரிஸம்“ சிலாங்கூர்
மற்றும் சுற்றுலாத் துறை மேலாளர் கூறினார்.

"மலேசியாவில் அதிக கோல்ஃப் மைதானங்களைக் கொண்ட மாநிலம் சிலாங்கூர் ஆகும்.
இங்கு மொத்தம் 29 கோல்ஃப் மைதானங்கள் உள்ளன.

"எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் பேக்கஜ் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகளிடமிருந்து சாதகமான வரவேற்பைப் பெறும் என்பதில் நாங்கள்
நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று ஃபரோல் முஸ்தபா கூறினார்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு ஒரு பெரிய கோல்ஃப் போட்டியைக் கூட்டாக ஏற்பாடு
செய்யவுள்ள கார்ப்பரேட் மற்றும் அரசு துறைகளின் ஒத்துழைப்பை ஃபரோல்
வரவேற்றார்.

"இந்தக் கோல்ஃப் போட்டி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில்
ஒன்றாகும், மேலும் எதிர்காலத்தில் இதை பெரிய அளவில் நடத்த உத்தேசித்துள்ளோம்.

"கார்ப்பரேட் துறை அல்லது அரசாங்கம் போன்ற பிற நிறுவனங்களுடன் நாம்
ஒத்துழைக்க முடிந்தால், அது சிறந்தது. இது நன்மையை அளிக்கிறது மற்றும்
சிலாங்கூருக்குச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும்," என்று அவர் கூறினார்.


Pengarang :