SELANGOR

குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான புகலிடங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்- மாநில அரசு உத்தரவு

ஷா ஆலம், டிச 8 – சிலாங்கூர் மாநிலத்தில் செயல்படும் குடும்ப
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து புகலிட
மையங்களும் சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட வேண்டும் என
மாநில அரசு நிபந்தனை விதித்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு
வேண்டிய உதவிகளை செய்வது உள்ளிட்ட நடப்பு விதிமுறைகள்
முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை
அவசியமாகிறது என்று மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை சில புகலிட மையங்கள்
பின்பற்றாததால் சிலாங்கூரில் உள்ள அனைத்து மையங்களும் சமூக
நலத்துறையில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய நாங்கள்
விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

சிறார் பாதுகாப்பு இல்லங்கள் உள்ளிட்ட அரவணைப்பு மையங்களுக்கு
நாங்கள் உதவ விரும்புகிறோம். எனினும், அவை சமூக நலத் துறையின்
விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் எங்களால் உதவ
இயலவில்லை. ஆகவே. இவற்றை ஒருமுகப்படுத்த விரும்புகிறோம் என
அவர் சொன்னார்.

மேலும், இத்தகைய மையங்கள் கட்டிட பாதுகாப்பு உள்பட சம்பந்தப்பட்ட
ஊராட்சி மன்றங்களின் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும். இந்த
அனுமதிகளைப் பெறுவதில் அவர்களுக்கு நாங்கள் உதவுவோம் என அவர்
கூறினார்.

நேற்று இங்கு சாயாங்கி வனிதா எனும் பிரசார இயக்கத்தை தொடக்கி
வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :