அரசு ஊழியர்களின் சிறப்பான சேவை அடுத்தாண்டும் தொடர வேண்டும்- பிரதமர் வேண்டுகோள்

புத்ரா ஜெயா, டிச 11- பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் உயரிய மதிப்புக் கூறுகளை உட்கிரகிப்பதன் மூலம் தங்களின் சிறப்பான சேவையை அடுத்தாண்டும் தொடரும் அதேவேளையில் சௌகர்யமான சூழல் கலாசாரத்தை அமல்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று இங்கு நடைபெற்ற பிரதமர் துறையின் டிசம்பர் மாதத்திற்கான மற்றும் இவ்வாண்டிற்கான இறுதி ஒன்று கூடல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியா மடாணியை அடிப்படையாகக் கொண்ட உயரிய மதிப்புக் கூறுகள் நாட்டை மேன்மையுறச் செய்யவும் அதன் கௌரத்தை உயர்த்தவும் உதவும் என நிதியமைச்சருமான அவர் சொன்னார்.

உயரிய மதிப்புக் கூறுகளை நாம் கொண்டிருந்தால், அவற்றை மடாணி கோட்பாட்டில் உட்கிரகித்தால் அரசாங்கத்தை உயர்த்தவும் கடந்த கால பலவீனங்களைக் களையவும் இயலும் என முடியும் என நான் நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

ஒற்றுமை உணர்வுடன் 2023ஆம் ஆண்டிற்கு நாம் விடைகொடுக்கும் அதேவேளையில் புத்தாண்டில் நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடக்குவோம் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்ர் அகமது ஜாஹிட் ஹமிடி, பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்காப்ளி முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :