SELANGOR

வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக மினி கார்னிவல் ஏற்பாடு – எம்பிஏஜே 

ஷா ஆலம், டிச 18: வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான மினி கார்னிவல் டிசம்பர் 19 முதல் 21 வரை பல்வேறு தொழில் முனைவோர்களுக்கான நடவடிக்கைகளுடன் அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வு மெனாரா எம்.பி.ஏ.ஜே., நிலை 4 கலையரங்கில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்று நாள் நடைபெறவுள்ளதாக  உள்ளூர் அதிகாரசபை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

“மேலும், இதில் , சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் திட்டம் (PLATS), சிலாங்கூர் ஹிஜ்ராத் திட்டம், டிஜிட்டல் நியாகா, SME கார்ப் மற்றும் யூனிஃபை பிசினஸ் உள்ளிட்ட தொழில் முனைவோர்களின் பல்வேறு கண்காட்சிகளும், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட உள்ளூர் தயாரிப்புகளின் விற்பனையும் நடைபெறும்.

“இணையம் வணிகம் தொடர்பான விளக்கங்கள், குறுந்தொழில் முனைவோரின் வணிகங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஊக்கத் தொகைகள் மற்றும் வளாகத்தின் தூய்மை விளக்கங்கள் ஆகியவை பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், உணவு கூப்பன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன,” என்று தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 14ஆம் தேதி வரை மொத்தம் 4,204 வளாகங்கள் தங்களது வணிக உரிமங்களைப் புதுப்பித்துள்ளன, 3,880 குறுந்தொழில் முனைவோரின் உரிமங்கள் புதுப்பிக்கப்படவுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான எம்பிஏஜே வணிக உரிமம் புதுப்பித்தல் கவுண்டர், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை கேலரி நிலை 4, மெனாரா எம்பிஏஜேயில் திறந்திருக்கும், அதே நேரத்தில், மெலாவத்தி மாலில் நிலை 1இல் நவம்பர் முதல் இந்த மாத இறுதி வரை கவுண்டர் திறந்திருக்கும். அக்கவுண்டர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.


Pengarang :