SELANGOR

முக்கிம் ரவாங், கோம்பாக்கில் 2,252 ரூமா இடமான் யூனிட்கள் கட்டப்படும்

ஷா ஆலம், டிச 19: பெர்மோடாலன் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட்
(பிஎன்எஸ்பி) அதன் துணை நிறுவனமான பிஎன்எஸ்பி கன்ஸ்ட்ரக்ஷன்
எஸ்டிஎன் பிஎச்டி (பிசிஎஸ்பி) மூலம் முக்கிம் ரவாங், கோம்பாக்கில்
2,252 ரூமா இடமான் யூனிட்களை உருவாக்கவுள்ளது.

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கும் இத்திட்டம்
200,000 மலிவு விலை வீடுகளை உருவாக்குவதற்கான மாநில அரசு
திட்டம்  கொண்டுள்ளது என்று அதன் தலைமை நிர்வாக
அதிகாரி ராஜா அகமட் ஷஹ்ரிர் இஸ்கண்டார் ராஜா சலீம்
தெரிவித்தார்.

இத்திட்டம் முடிவடைய மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப் பேருந்துப் போக்குவரத்தின் மிகப்பெரிய
ஆபரேட்டரான எபிகான் பெர்ஹாட் உடன் இணைந்து இக்கட்டுமானம்
மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், இத்திட்டத்திற்குச் சிலாங்கூர் ரியல் எஸ்டேட் ஹவுசிங்
அத்தாரிட்டியின் (LPHS) தகுதிகளை  பூர்த்தி  செய்யும் இம்மாநிலக் குடிமக்கள் https://lphs.gov.my என்ற  இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று
அஹ்மத் ஷஹ்ரிர் மேலும் கூறினார்.

RM250,000 மற்றும் அதற்கும் குறைவான விலையில் 200,000 வீடுகளின்
கட்டும் திட்டம் தாவாரான் கித்தா சலுகையில் கோடிட்டுக்
காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், 2018 முதல் பக்காத்தான் ஹராப்பான்
நிர்வாகத்தின் ஐந்து ஆண்டுகளில் 171,000 வீடுகளை மாநில அரசு
கட்டிக் கொடுத்தது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி

இந்த திட்டத்தை உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சகமும்
அங்கீகரித்துள்ளது என்று அவர் விளக்கினார், அதாவது குறைந்த
விலையில் வீடுகளை கட்டுவதில் சிலாங்கூர் மிக சிறந்த மாநிலம்
என்பதை ஒப்புக் கொண்டது.


Pengarang :