ECONOMYSELANGOR

ஹிஜ்ராவின் வர்த்தக கடனுதவிக்கு விண்ணப்பிக்க வணிகர்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், டிச 25- சிறிய அளவில் வர்த்தகத்தை தொடங்குவதற்கு அல்லது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் தேவைப்படுவோர் வர்த்தக கடனுதவிக்கு யாயாயான் ஹிஜ்ரா அறவாரியத்தைத்  அணுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஹிஜ்ரா அறவாரியம் வாயிலாக ஐ-பிஸ்னஸ், ஐ.பெர்மூசிம், நியாகா டாருள் ஏஹ்சான் (நாடி), கோ டிஜிட்டல், ஜீரோ டு ஹீரோ ஆகிய வர்த்தக கடனுதவித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டங்கள் வாயிலாக வர்த்தக கடனுதவிப் பெற விரும்புவோர்  https://www.hijrahselangor.com/risalah-skm-hijrah…/ என்ற அகப்பக்கம் அல்லது http://mikrokredit.selangor.gov.my/  என்ற இணைப்பின் வாயிலாக விண்ணப்ப பாரங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

வர்த்தகக் கடனுதவி தொடர்பில் விரிவான விபரங்களைப் பெற விரும்புவோர் அருகிலுள்ள ஹிஜ்ரா கிளைகளைத் தொடர்பு கொள்ளலாம்.

மூலதனப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கும் சிறு வணிகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கும் ஹிஜ்ரா வர்த்தக கடனுதவி வழங்குகிறது.

கடந்த ஜூன் 2023ஆம் ஆண்டு வரை ஹிஜ்ரா அறவாரியத்திடமிருந்த 58,464 தொழில் முனைவோர் 76 கோடியே 88 லட்சம் வெள்ளியை வர்த்தக  கடனாகப் பெற்றுள்ளனர். அவர்களில்  60 விழுக்காட்டினர் அல்லது 34,823 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கவியல் முறையிலான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கில் டிக் டாக் வியூகப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஹிஜ்ரா இலவசமாக அமல்படுத்தி வருகிறது.


Pengarang :