NATIONAL

கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது 8,028 விபத்துகள் பதிவு

ஷா ஆலம், டிச 29: ஐந்து நாட்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது மொத்தம் 8,028 சாலை விபத்து குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் தெரிவித்தார்.

டிசம்பர் 22 முதல் 26 வரை பதிவு செய்யப்பட்டதில் 75 மரண விபத்துகள், 29 கடுமையான காயங்கள் மற்றும் 303 சிறிய காயங்கள் ஆகியவை அடங்கும் என்று டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி கூறினார்.

“வாகனச் சேதம் சம்பந்தப்பட்ட 7,621 விபத்துகள், மற்றவை சிறிய மோதல்கள்” என்று தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட காலகட்டத்தில் 9.8 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் சாலையைப் பயன்படுத்தின மற்றும் லெபுஹ்ரயா உத்தாரா செலாத்தான் நெடுஞ்சாலை (பிளாஸ்) அதிக வாகன எண்ணிக்கையைப் பதிவு செய்தது என முகமட் அஸ்மான் கூறினார்.

காராக் நெடுஞ்சாலை மற்றும் பந்தாய் தீமோர் நெடுஞ்சாலை ஆகிய இரண்டு வழித்தடங்களையும் ஒரே காலகட்டத்தில் 1.2 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

இந்த விடுமுறை காலத்தில், நாடு முழுவதும் நெரிசல் அதிகம் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவ்விடங்களில் காவல்துறையினரால் ஓப்ஸ் லஞ்சார் அறிமுகப்படுத்தப் பட்டதாக முகமட் அஸ்மான் கூறினார்.

அனைத்து உறுப்பினர்களும் போக்குவரத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மாநில மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் கூட்டாட்சி, மாநில மற்றும் நகர சாலைகளைக் கண்காணிக்கின்றனர்.


Pengarang :