SELANGOR

எஹ்சான் ரஹ்மா விற்பனை மூலம் RM30.8 மில்லியன் பெறப்பட்டது

ஷா ஆலம், ஜன 5: கடந்த ஆண்டு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் எஹ்சான் ரஹ்மா விற்பனை மேற்கொள்ளப்பட்டது மூலம் மொத்தம் RM30.8 மில்லியன் பெறப்பட்டுள்ளது.

இந்தத் தொகையானது RM18.1 மில்லியன் மானியத் தொகையை உள்ளடக்கியதாக சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகக் குழுமத்தின் (பிகேபிஎஸ்) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸி கூறினார்.

“RM18.1 மில்லியன் மானியச் செலவில், மாநில அரசு அடிப்படைத் தேவைகளை சந்தையை விட 30 சதவீதம் மலிவாக வழங்க முடியும்.

“உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்துடன் (KPDN) நல்ல ஒத்துழைப்பின் விளைவாக கடந்த ஆண்டு இத்திட்டம் வெற்றியடைந்ததாக நாம் கூற முடியும்.

மேலும் வாய்ப்பிருந்தால் இந்த ஆண்டும் நாங்கள் அதனைத் தொடருவோம்,” என்று அவர் இன்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

RM10 மில்லியன் மக்கள், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குழுவின் (B40) சுமையை எளிதாக்க இந்த ஆண்டு மலிவு விற்பனையைத் தொடர மாநில நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது என விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

சுமார் ஐந்து மில்லியன் குடியிருப்பாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில், உறைந்த உணவுப் பொருட்கள் கூடுதலாக பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பொருட்களின் விற்பனை மூலம் இத்திட்டம் மேம்படுத்தப்படும் என்று இஷாம் ஹாஷிம் விளக்கினார்.

இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 1,800க்கும் மேற்பட்ட இடங்களில் அடிப்படைப் பொருட்கள் மலிவு விலையில் விற்பனை செய்யும் திட்டம் எதிர்வரும் ஜனவரி 15ஆம் தேதி மீண்டும் தொடரவுள்ளது.


Pengarang :