SELANGOR

சிலாங்கூரில் மக்களுக்கான சேவைகளை வலுப்படுத்த மாவட்ட மற்றும் நகராட்சிகளின் தரம் உயர்த்தப்படும்

ஷா ஆலம், ஜன 5: இவ்வாண்டு சிலாங்கூரில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சிகளின் (பிபிடி) சேவைகளை மேலும் வலுப்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான  ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை சிறப்பாகக் கையாளுவதற்கான வழிமுறை மேம்படுத்த முன்னாள் ஊராட்சி தலைவர்கள், துறை இயக்குநர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) அமைப்பு உருவாக்கப்படும் என டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

“இக்குழு பிபிடிகள் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக அமைக்கப்படும். பொதுமக்களில் 50 சதவீதத்தினர் உள்ளூர் அரசாங்க சேவைகளில் திருப்தி அடைந்துள்ளனர் என மெர்டேக்கா மையம் (சுயாதீனமான ஆராய்ச்சி அமைப்பு) பதிவிட்டது. ஆனால் நாங்கள் இன்னும் அதை அதிகமாக விரும்புகிறோம்.

“எனவே, எந்த வொரு பயன்பாட்டு முறையையும் தரப் படுத்துதல் உட்பட சமூகம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இந்த குழு சிறந்த முறையைக் கண்டறியும்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதற்கிடையில், கிள்ளான் நகராண்மை கழகத்தை மாநகரமாக மாற்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விழா அடுத்த பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாயன்று, மேயராக நியமனம் செய்வதற்கான கடிதத்தை யாங் டி பெர்துவான் எம்.பி.கே. டத்தின் படுகா நோரைனி ரோஸ்லானிடம் மாநிலச் செயலாளர் டத்தோ செத்தியா ஹாரிஸ் காசிம் வழங்கினார்.


Pengarang :