SELANGOR

நெல் களஞ்சியத்துக்கும் விற்பனை மையத்திற்கு யாங் டி-பெர்துவான் அகோங் வருகை 

சிகிஞ்சான், ஜன 5: இன்று நெல் களஞ்சியத்துக்கும் விற்பனை மையத்திற்குச் யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா வருகை புரிந்தார்.

காலை 10 மணிக்கு அவரின் வருகையை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர.

இதில் பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலும் கலந்து கொண்டார்.

PLS Marketing (M) Sdn Bhd க்கு சொந்தமான அரிசி பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நெற்களஞ்சியம், உள்ளூர் நெல் சாகுபடி பற்றிய தகவல் மற்றும் வரலாற்றை வழங்கும் சுற்றுலாப் பயண தளமாக விளங்குகிறது.

அதே நிகழ்ச்சியில், யாங் டி-பெர்துவான் அகோங் நெல் நடவு மற்றும் அறுவடை இயந்திரங்களையும் இயக்கி தொடங்கி வைத்தார்.

பிறகு புதிய ஐந்து மாடி தொழிற்சாலைக் கட்டிடத்திற்கு சென்று, கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து நெல் வயல்களின் அழகையும், சுற்றுப்புறப் பகுதியையும் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

இந்நிகழ்வில் பகாங் வெள்ள பேரிடரில் பாதிக்கப் பட்டவர்களுக்கு  10 மெட்ரிக் டன் அரிசியை PLS நிறுவனம் நன்கொடையாக  வழங்கியது. அதை பகாங் மாநில அரசாங்கத்தை பிரதிநிதித்து அல்-சுல்தான் அப்துல்லா பெற்று கொண்டார்.


Pengarang :