SELANGOR

சாலைகள் அடிக்கடி சேதமடைவதை குறித்து கிள்ளான் மேயருடன் ஒரு சந்திப்பு – டாக்டர் ஜி குணராஜ்

ஷா ஆலம், ஜன 11: குடியிருப்பாளர் ஒருவர் சாலையில் உள்ள குழிகளை மூடும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் கிள்ளான் மேயருடன் ஒரு சந்திப்பை நடத்த உள்ளார்.

ஜாலான் உலுபாலாங், தாமான் செந்தோசா பகுதி கனமழை காரணமாக வும் கனரக வாகனங்கள் அதிகம் அப்பாதையை பயன்படுத்தப்படுத்துவதாலும் சாலைகள் அடிக்கடி சேதமடைகின்றன என டாக்டர் ஜி குணராஜ் கூறினார்.

“செந்தோசா பார்க் மற்றும் கிள்ளான் சுற்றிலும் குண்டும் குழியுமாக உள்ள மற்றும் சேதமடைந்த சாலைகளை சரி செய்வதை உறுதி செய்வதற்காக இன்று மாலை கிள்ளான் மேயருடன் (டத்தின் படுகா நோரைனி ரோஸ்லான்) ஒரு கூட்டம் நடைபெறும்.

“இருப்பினும், சாலையை சீரமைத்த நபர்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கிள்ளான் நகராண்மை கழகத்தை பரிந்துரைத்துள்ளேன்,” என்று அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

நேற்று, செந்தோசாவில் புதிதாக உருவான ஒரு சாலை குழியை  மூடி, அதன் மேல் மஞ்சள் வண்ணத்தில் ‘என் பணம்’ என்ற வார்த்தைகளை எழுதிய நபர் ஒருவர் சமூக ஊடகப் பயனர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த பாதை அடிக்கடி சேதம் அடைந்து பயனாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளதால் நடைபாதை பணியை அந்த நபர் தானே மேற்கொண்டார் என்பது புரிகிறது.

இதற்கிடையில், சுமார் 3 மாதங்களுக்கு முன்பு அச்சாலை சீரமைக்கப் பட்டதாகவும், ஆனால், நிற்காமல்  மழை பெய்வதால், மீண்டும் பழுதடைந்துள்ளது என முன்னாள் எம்பிகே கவுன்சிலர் எம்.பிரபு கூறினார்.

இது குறித்து  எம்.பி.கே.,க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, செந்தோசா முழுவதும், சேதமடைந்த சாலைகள் ஒவ்வொன்றாகச் சீரமைக்கப்படும்,” என்றார்.

இதற்கிடையில், பெறப்படும் ஒவ்வொரு உள்கட்டமைப்பு புகார்கள் மீதும் தனது தரப்பு எப்போதும் கவனம் செலுத்துகிறது என்று எம்.பி.கே. கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் நோர்விசா மாவிஸ் தெரிவித்தார்.


Pengarang :