விமான தொழில்நுட்ப பொறியியல் திட்டம் ஜனவரி 24 வரை திறந்திருக்கும்

ஷா ஆலம், ஜனவரி 13 – சிலாங்கூர் விமான தொழில்நுட்ப பொறியியல்  பயிற்சி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 24 வரை திறக்கப்பட்டுள்ளன.

மந்திரி புசார் கட்டமைப்பு அல்லது MBI இம்முறை  பதிவு  ஏப்ரல்  உடனடி   அமர்வுக்கானது என்று கூறியது.

விமான தொழில்நுட்ப பொறியியல்  GE இன்ஜின் சர்வீசஸ் மலேசியா Sdn Bhd (GE Malaysia) உடன் இணைந்து 24-மாத கால திட்டம், தொழில்துறை திறமைசாலிகளின்  திறனை மேம்படுத்துவதையும், அதே நேரத்தில் வேலைவாய்ப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

“சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. தகுதியானவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கவும், இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்” என்று நேற்று ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GE மலேசியாவுடன் பணிபுரியும் வாய்ப்பு, விண்வெளித் துறையின் வெளிப்பாடு, தொழில் வல்லுநர்கள் வழிகாட்டுதல் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு கொடுப்பனவுகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த திட்டத்தின் நன்மைகள்   இருக்கும்.

இதில் சேர்ந்துக்கொள்ள , விண்ணப்பதாரர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் மலேசிய குடிமக்களாக இருக்க வேண்டும், சிலாங்கூரில் பிறந்து அல்லது குறைந்தபட்சம் 11 ஆண்டுகள் வசிப்பவர்களாக  இருக்க வேண்டும்.

அவர்கள் குறைந்தபட்சம் 3.5 CGPA அல்லது அதற்கும் அதிகமான மெக்கானிக்கல், விண்வெளி, தொழில்துறை அல்லது உற்பத்திப் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறையில் 12 மாதங்களுக்கும் குறைவான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அதிக தகவல்களுக்கு, 0169096110 (ஃபிர்தௌஸ்), 0173881401 (Asyraf), அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

இந்த தொழிற்பயிற்சி திட்டம் என்பது விமான தொழில்நுட்ப பொறியியல்  துறையில் மிகவும் திறமையான பணியாளர்களை வழங்குவதற்கான மாநில அரசாங்கத்தின் முன்முயற்சி ஆகும்.

செப்டம்பர் 2022 இல் தொடங்கப்பட்டது, இது விமான தொழில்நுட்ப பொறியியல் துறையில் இளைஞர்களின் திறன் மேம்படுத்துவதும்  ஆற்றலை அதிகரிக்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் சிலாங்கூர்  ஆக்கத்திறன் கொண்ட நிலையான திறமை அல்லது தொழில் வல்லமைமிக்க  பணியாளர்களை கொண்டு இருப்பதை உறுதி செய்வதாகும்..


Pengarang :