SELANGOR

இணையம் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பீட்டு வரி தள்ளுபடி – எம்பி எஸ் எஸ்

ஷா ஆலம், ஜன 17: ஜனவரி 1 முதல் இணையம் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பீட்டு வரி தள்ளுபடியை உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) வழங்குகிறது.

ஏப்ரல் 30 வரை நடைபெறும் இந்த பிரச்சாரமானது எம்பிஎச்எஸ் பே மெய்நிகர் பில்லுக்கு RM3 முதல் RM6 வரையிலான தள்ளுபடிக்கு கூடுதலாக RM2 வழங்குகிறது என உள்ளூர் அதிகார சபை தெரிவித்தது.

“தள்ளுபடியானது முதல் RM150,000 மட்டுமே. இந்த தள்ளுபடி மீதான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை  எந்த முன் அறிவிப்பும்  இன்றி  மாற்றுவதற்கான உரிமையை எம்பிஎச்எஸ் கொண்டுள்ளது,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு எம்பிஎச்எஸ் கருவூலத் துறையை 03-6064 1331 நீட்டிப்பு 135/151 இல் தொடர்பு கொள்ளவும்.

கட்டண வழிகள் மற்றும் தள்ளுபடி தொகைகள் பின்வருமாறு:

  1. எம்பிஎச்எஸ் பே ( MPHS Pay)

ஒரு வருடத்திற்கான வரி செலுத்துதலுக்கு RM6 மட்டுமே + RM2 எம்பிஎச்எஸ் மெய்நிகர் பில்லுக்கு ஆகும்

2. ஜோம் பே (JomPAY)

-RM6 ஆண்டு வரி செலுத்துவதற்கு மட்டும்

 

3. இணைய வங்கி (Perbankan internet)

-RM6 ஆண்டு வரி செலுத்துவதற்கு மட்டும்

 

4. இ-டொம்பேட் (e-dompet)

-RM6 ஆண்டு வரி செலுத்துவதற்கு மட்டும்

 

5.எம்பிஎச்எஸ் இ-பில்லிங் முறை (Sistem e-billing MPHS )

-ஒவ்வொரு தவணைக்கும் RM3


Pengarang :