MEDIA STATEMENTNATIONAL

முடிதிருத்தும்,  பொற்கொல்லர் தொழிலில் தொழிலாளர்கள் பற்றாக்குறை-  துணை அமைச்சர்

கோலாலம்பூர், ஜன.20- நாட்டில் முடிதிருத்தும் தொழில் மற்றும் பொற்கொல்லர்கள் இன்னும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கும் துறைகளில் ஒன்றாகும் என்று துணை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

இருப்பினும், அவரது அமைச்சகம் மனித வள அமைச்சகத்தின் சார்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாது, மாறாக இந்த விவகாரம் குறித்து மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்கிடம் விளக்கம் பெறும்.
“நிச்சயமாக, நான் எங்கள் அதிகாரிகள் மூலம் மனிதவள அமைச்சக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டேன், மேலும் அறிவிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் இன்னும் 5,000 (இடங்கள்) நிரப்பப்படவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்,” என்று அவர் கூறினார்.

மலேசியன் இந்தியன் வர்த்தக சபை  (மைக்கி) இன்று ஏற்பாடு செய்த பொங்கல் கொண்டாட்டங்கள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தை (WES) துவக்கி வைத்து  டத்தோ ரமணன் பேசினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், சேவை  துறையில் 7,500 முடிதிருத்தும் தொழிலாளர்கள், ஜவுளித் தொழிலாளர்கள் மற்றும் பொற்கொல்லர் களுக்கான ஆட்சேர்ப்பு ஒதுக்கீட்டை திறக்க அமைச்சரவை ஒப்புக்கொண்டது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2009 ஆம் ஆண்டு முதல் முடக்கப்பட்டிருந்த மூன்று சேவைத் துணைத் துறைகளுக்கான வெளிநாட்டு பணியாளர்களின் ஆட்சேர்ப்பை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பைத் தொடர்ந்து இது அமைந்துள்ளது.

இதற்கிடையில், பல்வேறு வணிக பின்னணியில் இருந்து பெண் தொழில்முனைவோரை பிரதிநிதித்துவப்படுத்தும் WES, குறிப்பாக பெண்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகம் (Kuskop) செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் முயற்சிகளில் பங்கேற்பதை தவறவிடக்கூடாது என்றும் ரமணன் கூறினார்.
.

இதில் வணிதையர்  திறன் மேம்பாட்டு என்னும் பெமர்காசான் உசாஹவன் வனிதா (புவான்), ஸ்கிம் பெம்பியாயன் இக்தியார் (SPI), யுடிஏ பிஸ்னிதா(UDA Bizznita,), தெக்குன்னிதா (TEKUNNita), அத்துடன் வெற்றிகரமான பெண் தொழில்முனைவோர் ஈடுபாட்டிற்கான திறன் (sweet) ஆகியவை அடங்கும் என  தெரிவித்தார்


Pengarang :