MEDIA STATEMENTNATIONAL

மக்களிடமிருந்து திருடுபவர்களின்  இடுப்பை உடைக்க வேண்டும்

கிள்ளான், ஜனவரி 20 – தேசிய நிதி மற்றும் மக்கள் பணம் திருடப்பட்டது தொடர்பான விவகாரத்தில் உண்மையை கண்டறிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதியாக உள்ளார்.

அந்த வகையில், அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் துன் பட்டம் பெற்றவர்கள் உட்பட உயர்மட்ட நபர்களை விசாரணை செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“நாங்கள் வஞ்சகர்களைப் பின்தொடர்வோம், எனக்கு கவலையில்லை… (இந்த நபர்களுக்கு எதிராக) நாங்கள் நடவடிக்கை எடுக்க விரும்பும் போது, இந்த பிரதமர் மிகவும் கடுமையானவர் எனக் கூறி மக்கள் கோபமடைகின்றனர்.

”ஒரு துன் என்றால் விசாரிப்பது எளிதானது அல்ல”  எனக்கும் அது விசித்திரமானது தான் ஆனால் மக்கள் நலனுக்காக நடவடிக்கை எடுத்தால்  நீங்கள் அதை ஆதரிக்க வேண்டும் (விசாரணைகளை)

“ஒரு கிராமத் தலைவரை விசாரிப்பது எளிது; பள்ளி ஆசிரியரை விசாரிப்பது இன்னும் எளிதானது. பெரிய பணத்தை திருடும் பெரிய புள்ளிகளை நான் விசாரிக்க விரும்புகிறேன் …. இது எளிதானது என்று நினைக்கிறீர்களா?

” இல்லை. இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும்; மக்களின் செல்வங்களை அவர்கள் திருட விடாதீர்கள்,” என்று இன்று இரவு கிள்ளான்  செட்டி பாடாங்கில்  நடந்த தேசிய பொங்கல் விழா 2024 கொண்டாட்டத்தின் போது அன்வார்  கேட்டுக்  கொண்டார்.

புதனன்று (ஜனவரி 17), மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) 1990 களின் பிற்பகுதியில் அவரது வணிகப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் முன்னாள் பிரதமரின் மகன் ஒருவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றதை உறுதிப் படுத்தியது.

அதற்கு முன்னதாக, முன்னாள் நிதியமைச்சர் மற்றும் தொழிலதிபர் ஆகியோருடன் தொடர்புடையதாக நம்பப்படும் விசாரணையில் உதவுவதற்காக துன் டைம் ஜைனுடினின் மனைவி தோ புவான் நைமா அப்துல் காலித் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளும் எம்ஏசிசி தலைமையகத்தில் இருந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில், MACC கோலாலம்பூரில் உள்ள மெனாரா இல்ஹாமைக் கைப்பற்றியது, இது RM2.3 பில்லியனுக்கும் அதிகமான அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படுகிறது, இது ஒரு கார்ப்பரேட் பிரமுகர் மற்றும் ஒரு முன்னாள் மூத்த அமைச்சர் சம்பந்தப்பட்டது.

இதற்கிடையில், பிரதமர்  தேசத்திற்கு தீமையான அதிதீவிர உணர்வுகளுக்கு முக்கியத்துவம்  அளிப்பதை  இந்திய சமூகத் தலைவர்கள் ஒதுக்கி தள்ள வேண்டும் என  கேட்டுக்கொண்டார்

அனைத்து இனங்களும் தற்போது பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கோரி வருவதாகவும், நியாயமான  நீதியுமானதுமானதை மடாணி அரசாங்கம்  கருத்தில் கொள்ளும், அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் அரசாங்க வளம் பயன்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

“இந்திய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க, மலேசிய இந்திய  உருமாற்றப் பிரிவு (மித்ரா) மூலம் RM100 மில்லியனை ஒதுக்கியது மட்டுமின்றி, பள்ளிக் கழிவறைகள் மேம்படுத்துதல்,  பரம ஏழ்மை ஒழித்தல் , அரசு பணியாளர்கள் வீடுகள் மற்றும் தேசிய தொழில் முனைவோர் குழு பொருளாதார நிதியம் (Tekun) மூலம் RM 30 மில்லியன்” போன்ற பிற திட்டங்கள் மூலமாகவும் நாங்கள் அவற்றை நிவர்த்தி செய்கிறோம்   என்றார்.

“நிதி அமைச்சகம், மனித வள அமைச்சகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகம் உட்பட அனைத்து அமைச்சுகளையும் இனம் பாராமல் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடையாளம் காணுமாறு கேட்டுக் கொண்டேன்” என்று அன்வார் கூறினார்.


Pengarang :