healthNATIONAL

டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 3,525ஆக அதிகரித்துள்ளது

புத்ராஜெயா, ஜன 23: தொற்றுநோயியல் 2வது வாரம் (ME02) 2024 இல் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 3,525 ஆக அதிகரித்துள்ள நிலையில் முந்தைய வாரத்தில் 3,181 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.

இந்த காலகட்டத்தில் டிங்கி காய்ச்சலால் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹமட் ராட்ஸி அபு ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

முந்தைய வாரத்தில் 130 ஹாட்ஸ்பாட் இடங்கள் பாதிவாகியிருந்தன. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. அதாவது சிலாங்கூரில் 106, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் (17), பேராக்கில் (5) மற்றும் நெகிரி செம்பிலானில் (4) என பதிவாகியுள்ளன.

மேலும், பினாங்கும் சபாவும் தலா இரண்டு இடங்களைக் கொண்டுள்ளன.

இதற்கிடையில், ஜிகா கண்காணிப்புக்காக, 50 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதாகவும், அனைத்து பரிசோதனை முடிவுகளும் எதிர்மறையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :