SELANGOR

பத்துமலையில் சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் தைப்பூசத் திருவிழா- மந்திரி புசார் சிறப்பு வருகை

ஷா ஆலம், ஜன 23- சிலாங்கூர் மாநில அரசின் சிறப்பு தைப்பூச விழா நாளை 24ஆம் தேதி புதன்கிழமை இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தான வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகை புரியவிருக்கிறார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, கிள்ளான் தாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், சிலாங்கூர் மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி, செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ முகமது யாஸிட் சைரி, கோம்பாக் மாவட்ட அதிகாரி நோர் அஸ்லினா அப்துல் அஜிஸ், ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மேலும், மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநில பிரதிநிதியாக சங்கரத்னா ஏ. கிருஷ்ணன், மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் சார்பில் ஜி.கே. நடராஜன் கருப்பையா, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு துறையின் இயக்குநர் புர்ஹானுடின் ஹாஜி டாவுட் ஆகியோரும் பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கின்றனர்.

இவ்விழாவில் கலந்து கொள்ளும் மந்திரி புசார் மற்றும் பாப்பாராய்டு ஆகியோருக்கு தேவஸ்தானத்தின் சார்பில் ஆலய நிர்வாகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்வர்.

பாப்பாராய்டுவின் வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த நிகழ்வில் மந்திரி புசார் சிறப்புடையாற்றுவார். இந்த விழாவின் முத்தாய்ப்பு அங்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலயங்களுக்கு மாநில அரசின் சார்பில் மானியம் வழங்கப்படும்.


Pengarang :