NATIONAL

3வது தொற்றுநோயியல் வாரத்தில் 3,971 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன

புத்ராஜெயா, ஜன 30: 3 வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME03) (ஜனவரி 14 முதல் 20 வரை) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,971ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 3,525 சம்பவங்களாக பதிவாகியிருந்தது.

குறிப்பிட்ட காலகட்டத்தில் டிங்கி காய்ச்சலால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் அறிக்கை ஒன்றில் கூறினார்.

முந்தைய வாரத்தில் 136 ஆக இருந்த ஹாட்ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 127 ஆக குறைந்துள்ளது. சிலாங்கூரில் (105) கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் (13), பேராக்கில் (3) மற்றும் நெகிரி செம்பிலானில் (2) என்று பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஒரு சிக்குன்குனியா சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த சிக்குன்குனியா சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டு ஆகும் என்றார்.

” 97 இரத்த மாதிரிகள் ”சிக்கா”வுக்காகப் பரிசோதிக்கப்பட்டன, முடிவுகள் அனைத்தும் எதிர்மறையாக இருந்தன,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :