SELANGOR

வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்த தவறியதால் அபராதம் விதிக்கப்பட்டது

சுபாங் ஜெயா  ஜன 31: சுபாங் ஜெயா மாநகராட்சி, குடியிருப்பு தொகுதி நிர்வாகங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அதன் ஆண்டு  கூட்டத்தை நடத்த தவறிய” மெய்ன் பிளேசுக்கு” மூன்று அபராதங்களை வெளியிட்டது.

மேற்கண்ட சர்வீஸ் அபார்ட்மெண்ட் மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்த தவறிவிட்டது என்று கட்டிட ஆணையர் துறை (COB) கண்டறிந்துள்ளது என சுபாங் ஜெயா மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறுகையில்,

“இந்த அபராதங்கள் அடுக்குமாடி குடியிருப்பு மேலாண்மை சட்டம் 2013 (சட்டம் 757) இன் கீழ் வழங்கப்படுகிறது, இது வருடாந்திர பொதுக் கூட்டம் 15 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று விளக்குகிறது.

அடுக்குமாடி குடியிருப்பு மேலாண்மை (பராமரிப்பு மற்றும் மேலாண்மை) விதிமுறைகள் 2015, சட்டம் 757 இன் துணை ஒழுங்குமுறை 21(5) இன் கீழ் அபராதங்கள் வெளியிடப்பட்டது என்று அவர் விளக்கினார்.

“ஒவ்வொரு குற்றத்திற்கும் RM25,000 அபராத அறிவிப்பு விதிக்கப்பட்டு, விளக்கமறிதலுக்கு 14 நாட்கள் அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது.

“எந்த ஒரு கட்டணமும் செலுத்தப்படாவிட்டால், நடவடிக்கை எடுக்கப் படலாம் மற்றும் RM50,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது ஒவ்வொரு குற்றத்திற்கும் இரண்டும் விதிக்கப்படலாம்” என்று அவர் கூறினார்.

சுபாங் ஜெயாவில் உள்ள கட்டிடங்களின் நிர்வாகத்திற்கு சட்டம் 757 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி தங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறு முகமட் ஃபௌசி அறிவுறுத்தினார்.

“இதன் வழி அபராதங்கள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர படுவதை தவிர்க்க முடியும்.

” அடுக்குமாடி குடியிருப்பு மேலாண்மை மற்றும் பராமரிப்பு அம்சங்கள் மிகவும் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுடனும் விவாதித்து முடிவெடுப்பதற்கு வருடாந்திர பொதுக் கூட்டம் முக்கிய ஊடகமாகும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :