SELANGOR

கழிவுகளை எரிக்கும் ஆலை கட்டுமானம் குறித்து குடியிருப்பாளர்களின் கருத்துகள் செவிமடுக்கப்படும்

கோலாலம்பூர், பிப். 1: பண்டார் தாசேக் புத்ரி, ரவாங்கில் கழிவுகளை எரிக்கும் ஆலை (இன்சினரேட்டர்) கட்டுமானம் குறித்து குடியிருப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் கருத்துகளைக் கேட்க மாநில அரசு தயாராக உள்ளது.

அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஜரீன்கான் ரவாங் தோலாக் இன்சினரேட்டர் (ஜேஆர்டிஐ) பிரதிநிதிகளுடன் விரைவில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதியளித்தார்.

“என்.ஜி.ஓ.வு டன் கூட்டம் நடத்துவதற்கான அட்டவணை ஏற்பாடு செய்கிறேன். விரைவில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

“இன்னும் கால அவகாசம் உள்ளது, ஏனென்றால் திட்டத்திற்கு அனுமதி நாங்கள் இன்னும் வழங்கவில்லை. அவர்களின் பயத்தை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

இன்று மந்திரி புசாரும் அவரது மனைவி டத்தின் ஶ்ரீ மஸ்தியானா முகமட் அவர்களும் புக்கிட் ஜாலீல் பெவிலியன் ஷோப்பிங் சென்டரில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாலேக் கம்போங் திருவிழா விற்பனையைப் பார்வையிட்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில், பத்து ஆராங் மற்றும் ரவாங்கில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட மக்கள் ஜே.ஆர்.டி.ஐ உடன் ஒன்று கூடி, பண்டார் தாசேக் புத்ரியில் கழிவுகளை எரிக்கும் ஆலையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல என்றும், உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படும் இத்திட்டம் குறித்து குடியிருப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.


Pengarang :