SELANGOR

வெள்ளப் பிரச்சனையைத் தீர்க்க நீரணை வாயில் மேம்படுத்தப்படும்

கிள்ளான், பிப்.3: சுற்றுவட்டாரப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியாக பூலாவ் இண்டாவில் உள்ள நீரணை வாயிலை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீட்டிற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதே நேரத்தில் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) தெலோக் கோங்கில் உள்ள நீரணை வாயிலை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது, இது கனமழை மற்றும் அதிக அலைகள் ஏற்பட்டால் வெள்ளத்தைத் தவிர்க்கும் என போர்ட் கிள்ளான் மாநில சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹுரி கூறினார்.

“அதிக அலை மற்றும் கனமழை நிகழும் போது திடீர் வெள்ள அபாயத்தைக் குறைக்க தெலோக் கோங்கில் பயன்படுத்தப்பட வேண்டிய மிகவும் பொருத்தமான வடிவமைப்பு குறித்து ஜேபிஎஸ் ஆய்வு நடத்தி வருகிறது.

“பல்வேறு தொடர்புடைய ஏஜென்சிகளுடன் இணைந்து மாநில அரசு, குறுகிய கால அல்லது நீண்ட கால வெள்ள தணிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வெள்ள அபாயத்தைக் குறைக்க எப்போதும் முயற்சிக்கிறது,” என்று அவர் கூறினார்.

கிள்ளான் பண்டமாறன்எகோன்சேவில்  சீன புத்தாண்டை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் வவுச்சர் வழங்கும் விழாவில் அவர் இதனை தெரிவித்தார். சந்திர புத்தாண்டை கொண்டாடும் சீன வாக்காளர்களுக்கு வவுச்சர்கள் வழங்கிய அவர்,மாநில அரசு  நிர்ணயித்துள்ள குடும்ப வருமானம் மற்றும் சிலாங்கூர் வாசி தகுதிகளைக் கொண்டவர்களுக்கு மட்டுமே மாநில அரசாங்கத்திடம் இருந்து RM200 நன்கொடை  வவுச்சர்கள் பெறுவதை உறுதி செய்ய அவரது தரப்பு செயல்படுவதாகவும் அஸ்மிசாம் கூறினார்.


Pengarang :