SELANGOR

மாநில அரசு 20,800 யூனிட் இலவசக் கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளைப் பெற்றது

ஷா ஆலம், பிப் 5: மாநில அரசு பிபி ஹெல்த்கேர் குழுமத்திடம் இருந்து 20,800 யூனிட்
இலவச கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளை பெற்றது. அவை சிலாங்கூர்
முழுவதும் உள்ள சமூகச் சேவை மையங்களுக்கு விநியோகிக்கப்படும்.

மலேசியாவின் மிகப்பெரிய ஹெல்த்கேர் நிறுவனத்தின் சமூக பொறுப்பு (CSR)
RM104,000 மதிப்புள்ள சுய பரிசோதனை கருவி ஏற்றுக் கொள்ளப்பட்டதாகச் சுகாதார
ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

பள்ளி விடுமுறைகள் மற்றும் பண்டிகைகளின் போது கோவிட்-19 தொற்றைக்
கட்டுப் படுத்தவும் தடுக்கவும் உதவும் முயற்சியாக எனது அலுவலகத்துடன் இணைந்து
பணியாற்ற பிபி ஹெல்த்கேர் குழு விருப்பம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கை சிலாங்கூர் அரசு மற்றும் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்த
நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது என்று அவர் இன்று மாநில அரசு நிர்வாகக்
கட்டிடத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அவரது தரப்பு 25 சமூகச் சேவை மையங்களுக்கு சுய பரிசோதனை கருவிகளை
விநியோகித்து உள்ளது, ஒவ்வொன்றும் 800 யூனிட்களைப் பெற்றன.

சிலாங்கூரில், குறிப்பாகப் பண்டிகைக் காலம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில்,
கோவிட்-19 தொற்று திடீரென அதிகரித்தால், இந்நடவடிக்கை ஒரு முன் எச்சரிக்கையாக
இருக்கும்.

கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில்
கோவிட்-19 சம்பவங்கள் ஆபத்தான அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.

சிலாங்கூர் மக்களின் நல்வாழ்வுக்காக தனியார் துறை, கல்வியாளர்கள் மற்றும் அரசு
சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஒத்துழைப்பை
ஜமாலியா வரவேற்றார்.

இந்த ஒத்துழைப்பு சுகாதாரத் துறையில் ஒரு புதுமையான முறையாகப் பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) மாதிரியைப் பயன்படுத்துவதில் மாநில அரசு எடுத்த திறந்த அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறத,“ என்று அவர் கூறினார்.


Pengarang :