SELANGOR

சீனப் புத்தாண்டை முன்னிட்டு 250 கோழிகள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் வழங்கப்பட்டன – பண்டான் இண்டா தொகுதி

ஷா ஆலம், பிப் 9: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பண்டான் இண்டா தொகுதியில் வசிக்கும் சீன மக்களுக்கு மொத்தம் 250 கோழிகள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தனது தரப்பும் 50 பெறுநர்களுக்கு RM200 ரொக்கத்தை நன்கொடையாக வழங்கியதாகச் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.

“பண்டான் இண்டாவில் இது எங்கள் வழக்கம். ஒவ்வொரு முறையும் பண்டிகைக்கு முன், ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் சுமையைக் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

“இந்த நன்கொடை உங்களை உற்சாகப்படுத்தும் மற்றும் உங்கள் சுமையைக் குறைக்க உதவும் என்று நம்புகிறேன்” என அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

தொகுதியில் உள்ள தகுதியான சீன வாக்காளர்களுக்கு RM200 மதிப்புள்ள 400 சீனப் புத்தாண்டு ஷோப்பிங் வவுச்சர்கள் பிப்ரவரி 2 அன்று விநியோகிக்கப் பட்டதாக இஷாம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு RM4.78 மில்லியன் நிதியை உள்ளடக்கிய 23,900 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்களை மாநில அரசு வழங்கியது.

சிலாங்கூர் பட்ஜெட் 2024இல், சீனப் புத்தாண்டு, ஹரி ராயா ஐடில்பித்ரி மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களின் போது 82,400 பெறுநர்களுக்கு வழங்க ஜோம் ஷோப்பிங் வவுச்சர்களுக்கு RM16.48 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.


Pengarang :