SELANGOR

பெண்கள் திறன் மேம்பாட்டு குழு நடத்தும் இலவசச் சுகாதாரப் பரிசோதனை 

ஷா ஆலம், பிப் 15: எதிர்வரும் சனிக்கிழமை கோத்தா டாமன்சாரா பெண்கள் திறன் மேம்பாட்டு குழு நடத்தும் இலவசச் சுகாதார பரிசோதனை திட்டத்தில் பங்கேற்கப் பெண்கள் அழைக்கப் படுகிறார்கள்.

இந் நிகழ்ச்சி காலை 8.30 முதல் மதியம் 1 மணி வரை சுபாங் பெஸ்தாரியில் உள்ள டேவான் பூங்கா மாத்தாஹரியில் நடைபெறும் என கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் முகமட் இஸ்வான் அஹ்மட் காசிம் கூறினார்.

“சுயப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“வாருங்கள், நீங்கள் அனைவரும் இலவச சுகாதார பரிசோதனை யில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள். மேலும், நிபுணர் மருத்துவர்களுடன் கேள்வி பதில் அமர்வும் இருக்கும்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

பார்வையாளர்களுக்குப் புற்றுநோய் காரணங்கள் மற்றும் உணவு முறைகள் குறித்து மகளிர் மருத்துவ நிபுணர் விளக்கமளிக்க உள்ளார்.

கூடுதலாக 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ளலாம்.

ஏதேனும் கேள்விகள் அல்லது பாப் ஸ்மியர் சோதனைக்கு உங்கள் பெயரைப் பதிவு செய்ய விரும்பினால், 019-391 0022 என்ற எண்ணில் அனா ரசாக்கைத் தொடர்புகொள்ளலாம்.


Pengarang :