SELANGOR

”அனிசின்” குழந்தைகள் வளர்ச்சி பரிசோதனை

கோலாலம்பூர், பிப் 21: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நடவடிக்கையில் அசாதாரணத்தைக் கண்டறிந்தால் அனிசின் குழந்தைகள் வளர்ச்சி பரிசோதனை திட்டத்தில் பங்கேற்கலாம். அதன் மூலம் அவர்களின் குழந்தைகளின் திறனைக் கண்டறியலாம்.

இப்பரிசோதனை சிறந்த நிபுணர்களால் அதாவது குடும்ப மற்றும் குழந்தைகள் நலன், நடவடிக்கை சிகிச்சை, பேச்சு சிகிச்சை, ஒலி சிகிச்சை மற்றும் பிசியோதெரபி ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகிறது

குழந்தைகள் எளிதில் கோபப்படுவது, தனியாக விளையாடுவது, மெதுவான வளர்ச்சி மற்றும் அவர்களின் பெயரை அழைக்கும் போது பதிலளிக்காமல் இருப்பது ஆகியவை குழந்தைகளின் வளர்ச்சியில் அசாதாரணத்தைக் காட்டும் அறிகுறிகள் ஆகும்.

அனிஸ்யின் குழந்தைகள் வளர்ச்சி பரிசோதனையை மேற்கொள்ள பெற்றோர்கள் https://www.anisselangor.com/saringan என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் அல்லது சுவரொட்டியில் உள்ள QR யை ஸ்கேன் செய்யவும்.

விண்ணப்பதாரர்கள் சில நிபந்தனைக்கு உட்பட்ட வர்கள். அவை:

  • மலேசிய குடிமக்கள்

  • வளர்ச்சி தாமதம் பிரச்சனைகள் உள்ள 2-6 வயதுள்ள குழந்தைகள்

  • பதிவு B40 மற்றும் M40 குழுக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆதார ஆவணங்களை வழங்கவும்

  • தாய் / தந்தை / பாதுகாவலர்களில் ஒருவர் சிலாங்கூர் வாக்காளர்களாக இருத்தல் வேண்டும்


Pengarang :