NATIONAL

காணாமல் போன ஆறு மலை ஏறுபவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

சிரம்பான், பிப்.21: நேற்றிரவு கோலா பிலாவில் உள்ள அங்சி மலையில் காணாமல் போன ஆறு மலை ஏறிகள் இன்று அதிகாலை 2.34 மணியளவில் நெகிரி செம்பிலான் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையால் (ஜேபிபிஎம்) பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால், ஒரு பெண்ணுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஶ்ரீ மெனந்தி தீயணைப்பு நிலைய நடவடிக்கைகளின் கமாண்டோர் யுஸ்ரி அப்துல்லா சானி தெரிவித்தார்.

“அவர்களுக்கு “EMRS“ சிறப்புக் குழு மூலம் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த வாகனங்களில் வீட்டிற்குச் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்டனர்” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ராயல் மலேசியா போலீஸ் (PDRM), வன ரேஞ்சர் அலுவலகம், குடிமைத் தற்காப்புப் படை (APM) மற்றும் மலேசிய தன்னார்வத் தொண்டர்கள் (RELA) ஆகிய அமைப்புகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றார்.

மலை ஏறும் போது வழி தவறிவிட்டதாக அஞ்சப்படும் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் பற்றி தீயணைப்பு துறைக்கு இரவு 7.31 மணியளவில் புகார் வந்ததாகப் பெர்னாமா நேற்று தெரிவித்தது.

சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 28 முதல் 42 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் வன அலுவலகத்தில் முன்கூட்டியே பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :