SELANGOR

இல்திசம் சிலாங்கூர் சி ஹாட் திட்டத்திற்கான விண்ணப்பத்தை இணையத்தில் பூர்த்தி செய்ய அறிவுறுத்து – கோத்தா கெமுனிங் தொகுதி

ஷா ஆலம், பிப் 22: இல்திசம் சிலாங்கூர் சிஹாட் திட்டத்திற்கான விண்ணப்பத்தை இணையத்தில் பூர்த்தி செய்ய கோத்தா கெமுனிங் தொகுதியின் மக்கள் சேவை மையம் அதன் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொள்கிறது.  இதன் மூலம், விண்ணப்பச் செயல்முறை விரைவாகவும் சீராகவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் உள்ளன. குடும்ப வருமானம் RM 3,000.00ஆக இருத்தல், மற்றும் 21 வயது (மாணவர்) மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குடும்ப உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும்.

மேலும், தனிநபருக்கு வீட்டு வருமானம் RM 2,000.00 அல்லது அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும், இல்லையெனில் ஊனமுற்றோர் அட்டை வைத்திருப்பவர்கள் அல்லது மூத்த குடிமக்கள் (வயது 65 மற்றும் அதற்கு மேல்) இருக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், விண்ணப்பதாரர் சிலாங்கூர் மாநிலத்தின் வாக்காளராக அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மாநிலத்தில் வசிக்கும் நபராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

– இல்திசம் சிலாங்கூர் சிஹாட் விண்ணப்பப் படிவம் (இணையத்தில் நிரப்பவும்)

– சமீபத்திய சம்பள சீட்டு / ஓய்வூதியம் / EA / EPF / வருமான வங்கி கணக்கு

– விண்ணப்பதாரர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் அடையாள அட்டையின் நகல் (*21 வயதுக்குட்பட்ட குழந்தைகள்)

– ஊனமுற்றோர் அட்டை நகல் (ஏதேனும் இருந்தால்)

– முதன்மை விண்ணப்பதாரரின் SPR மதிப்பாய்வின் நகல்


Pengarang :