NATIONAL

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு பெண் மற்றும் சிறுமி மீட்பு

ஷா ஆலம், பிப்.23: நேற்று மாலை பந்திங்கில் உள்ள கடை ஒன்றில் சோதனை நடத்தியதில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு பெண் மற்றும் சிறுமி மீட்கப்பட்டனர்.

பிற்பகல் 3 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், வளாகம் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது, அதாவது திரைச் சீலைகளைப் கொண்ட நான்கு அறைகள் அமைக்கப்பட்டிருப்பது கண்டறிந்ததாகக் கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மட் ரிட்வான் முகமட் நோர்@சலே கூறினார்.

வெளிநாட்டினரை வாடிக்கையாளர்களாகக் குறிவைத்து சுமார் இரண்டு மாதங்களாக இந்த வளாகத்தில் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்தச் சோதனையின் போது, இதற்கு மூலதனமாகச் செயல்பட்ட உள்ளூர் பெண்ணையும், இதில் ஈடுபட்ட இரண்டு இந்தோனேசியப் பெண்களையும் கைது செய்தோம்.

“இந்த தொழிலுக்குத் தள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 25 வயதான உள்ளூர் பெண் மற்றும் 11 வயது சிறுமியையும் இந்த சோதனை மூலம் மீட்க முடிந்தது,” என்று அவர் கூறினார்.

தடுப்பு காவலில் வைப்பதற்காகச் சந்தேகநபர்கள் அனைவரும் தெலுக் டத்தோ நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். மேலும், ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்பு சட்டம் 2007 இன் பிரிவு 14 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கசையடி மற்றும் ஆயுள் தண்டனை அல்லது குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.


Pengarang :