SELANGOR

குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு 1,000 ஐந்து கிலோ அரிசி பேக்கட்டுகள் வழங்கப்படும்

ஷா ஆலம், பிப் 23: போர்ட் கிள்ளான் தொகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு (B40) “MISHA cat food“ நிறுவனம் 1,000 ஐந்து கிலோ அரிசி பேக்கட்டுகளை வழங்கியது.

வாழ்க்கைச் செலவு மற்றும் நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்வதில் மக்களின் சுமையைக் குறைக்க இந்த நன்கொடையை வழங்குவதாகச் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் சமான் ஹுரி கூறினார்.

“இது பெரிதும் பாராட்டப்படும் முயற்சியாகும், ஏனென்றால் குடியிருப்பாளர்களுக்கு உண்மையில் இந்த உதவி தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நாங்கள் குடியிருப்பாளர்களிடமிருந்து உணவுக்கான கோரிக்கைகளைப் பெறுகிறோம்.

“கடந்த சனிக்கிழமை இந்த நன்கொடை 30 பெறுநர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 970 அரிசி பேக்கட்டுக்ள் எதிர்காலத்தில் விநியோகிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த உதவி மக்களுக்குக் குறிப்பாக கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என  “MISHA“ நிர்வாக இயக்குனர் டாக்டர் கோ போ ஹுஹாட் தெரிவித்தார்.

“மேலும், 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் பரவல் பொருளாதாரத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, மக்களின் சுமையைக் குறைக்க நாங்கள் உதவ முயற்சிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :