NATIONAL

சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி பாலோங் கலாச்சாரச் சந்தையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

சபாக் பெர்ணம், பிப் 23: நேற்று சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி, பாரிட் 8, சுங்கை பஞ்சாங்கில் உள்ள பாலோங் கலாச்சாரச் சந்தையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு அமைப்பின் தலைவர் டத்தின் ஶ்ரீ மஸ்டியானா முகமட் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐயின் தலைமை நிர்வாக அதிகாரி சைபோலியாசன் எம் யூசோப் ஆகியோர் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகினை வரவேற்றனர்

மேலும், லோயாங், டோடோல் மற்றும் பண்டான் போன்ற பாரம்பரிய பலகாரங்கள் உட்பட சபாக் பெர்ணமில் உள்ள மக்களின் அடையாளமான பல்வேறு உள்ளூர் தயாரிப்புகளை விற்பனை செய்யும் 19 கடைகளை அவர் பார்வையிட்டார்.

டிஜிட்டல் கிளாசிக் சந்தையாக அறியப்படும் பாலோங் கலாச்சாரச் சந்தையைச் சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (பிளாட்ஸ்) கீழ் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் இயங்குகிறது.

கடந்த மூன்று வாரங்களாக இயங்கி வரும் பாலோங் கலாச்சார சந்தையில் துங்கு பெர்மைசூரி குதிரையில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.


Pengarang :