NATIONAL

கடந்தாண்டு 1.4 கோடி கொள்கலன்களைக் கையாண்டு கிள்ளான் துறைமுகம் சாதனை

புத்ராஜெயா, பிப் 23 – கிள்ளான் துறைமுகம் கடந்தாண்டு 20 அடி
நீளத்திற்கு இணையான 1 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரம்
கொள்கலன்களைக் (டி.இ.யு.) கையாண்டு சாதனை புரிந்துள்ளது. கடந்த
2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 20
ஆயிரம் கொள்கலன்களாக இருந்ததாகப் போக்குவரத்து அமைச்சர்
அந்தோணி லோக் கூறினார்.

அதே சமயம் தஞ்சோங் பெலேப்பாஸ் துறைமுகத்தில் கடந்த 2022ஆம்
ஆண்டு1 கோடியே 4 லட்சத்து 80 ஆயிரமாக இருந்த கொள்கலன்கள்
எண்ணிக்கை கடந்தாண்டு 1 கோடியே 5 லட்சத்து 10 ஆயிரமாக உயர்வு
கண்டதாக அவர் சொன்னார்.

கோலக் கிள்ளான் துறைமுகமும் தஞ்சோங் பெலேப்பாஸ் துறைமுகமும்
உலகின் பரபரப்பான 20 துறைகமுகங்களில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்கி
வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

உலக விநியோகச் சங்கிலியில் மலேசிய பொருளாதாரம் முக்கிய
அங்கமாக விளங்குவதை இந்த சிறப்பான அடைவு நிலை பிரதிபலிக்கிறது
என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் சவா காசே மடாணி
மன்றத்தின் கடல்சார் துறையின் சாதனை தொடர்பான நிகழ்வில்
உரையாற்றிய போது அமைச்சர் இவ்வாறு சொன்னார்.

கோலக்கிள்ளான் துறைமுகத்தில் கடல்மார்க்க சரக்கு (கார்கோ
டிரான்ஷிப்மெண்ட்) மற்றும் உள்ளூர் சரக்கு கையாளுதல் தொடர்பான
விகிதாசாரம் கடந்த 2014ஆம் ஆண்டு 70-30 ஆக இருந்த நிலையில்
கடந்தாண்டு அது 55-45 ஆக மாற்றம் கண்டு என்றார் அவர்.

சுங்கத் துறையின் நுழைவாயில் வாயிலாக அல்லாமல் சரக்குகளை ஒரு
கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றும் முறை கார்கோ டிரான்ஷிப்மெண்ட் எனப்படுகிறது. உள்ளுர் சரக்கு என்பது உள்நாட்டில் பெறப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் சரக்கை குறிக்கிறது.


Pengarang :