NATIONAL

தேசியப் பதிவுத் துறையின் புதிய தலைமை  இயக்குநராகப் பட்ருல் ஹிஷாம் அலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

கோலாலம்பூர், பிப் 28 – தேசியப் பதிவுத் துறையின் (NRD) புதிய தலைமை இயக்குநராக  உள்துறை அமைச்சகத்தின் (KDN) பதிவு மற்றும் அமைப்புப் பிரிவுச் செயலர் பட்ருல் ஹிஷாம் அலியாஸ் இன்று முதல் நியமிக்கப் பட்டுள்ளார்.

பிப்ரவரி 2 அன்று பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவுக்கு (BHEUU) மாற்றப்பட்ட ஜம்ரி மிஸ்மானுக்குப் பதிலாக அவர் நியமனம் செய்யப் பட்டதாக தேசியப் பதிவுத் துறை அறிக்கை ஒன்றில் அறிவித்தது.

மேலும், 52 வயதான பட்ருல் ஹிஷாம், 1997 ஆம் ஆண்டு நிர்வாக மற்றும் இராஜதந்திர அதிகாரியாக (PTD) நியமிக்கப்பட்டதிலிருந்து 27 ஆண்டுகள் பொது சேவையில் பணியாற்றியுள்ளார்.

அவர் பதிவுத் துறையில் நிதி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநராகவும், அடையாள அட்டைப் பிரிவு இயக்குநராகவும் 2015 முதல் 2022 வரை பணியாற்றினார்.

அதுமட்டுமின்றி, உள்துறை அமைச்சகத்தின் மலேசியா சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லை ஏஜென்சிக்கு நியமிக்கப்பட்ட சைஃபுல் யாசான் அல்விக்குப் பதிலாகப் பிப்ரவரி 26 அன்று, தேசியப் பதிவுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரலாகச் சரினா அபிசாவை நியமிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

“அனைத்து பங்களிப்புகளுக்கும், சேவைக்கும் ஜம்ரி மற்றும் சைஃபுல் யாசான் ஆகியோருக்குத் தேசியப் பதிவுத் துறை தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிக்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :