NATIONAL

இதுவரை சிலாங்கூரில் 681 மின்சார வாகன (EV) சார்ஜிங் யூனிட்டுகள் நிறுவப்பட்டுள்ளன

ஷா ஆலம், பிப் 29: மாநிலம் முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்குள் 1,000 நிலையங்களைக் கட்டுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இதுவரை மொத்தம் 681 மின்சார வாகன (EV) சார்ஜிங் யூனிட்டுகள் நிறுவப் பட்டுள்ளன என்று சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

“இலவசப் பார்க்கிங் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ஊக்குவிப்புகளை வழங்குவதற்கான வழிமுறைகளையும் மாநில அரசு ஆலோசித்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஷா ஆலம் மாநகராட்சி மாநிலம் முழுவதும் EV சார்ஜர்களை நிறுவுவது தொடர்பான வழிகாட்டுதல்களை தயாரித்து அளிக்கும் ஒரு முன்னோடி திட்டத்தையும் நடத்தி வருகிறது என்றார்.

இத் திட்டத்தைப் பிற பகுதிகளில் அமல்படுத்தும் எண்ணத்தை மாநில அரசிடம் முன்வைக்கும் முன்பாக உள்ளாட்சி அமைப்பு (பிபிடி) அதை ஆழமாக ஆய்வு செய்யும் என்று அவர் விளக்கினார்.


Pengarang :