NATIONAL

முன்கூட்டியே ஓய்வுபெற 6,394 ஆசிரியர்களுக்கு ஒப்புதல்

கோலாலம்பூர், பிப் 29 – கடந்த ஆண்டு மொத்தம் 6,394 ஆசிரியர்கள் அல்லது ஒட்டுமொத்தமாக 1.49 சதவீதம் ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டதாக மக்களவைத் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டோடு (1.23 சதவீதம்) ஒப்பிடுகையில் சிறிது அதிகரிப்பைக் காட்டுகிறது என துணைக் கல்வி அமைச்சர் வோங் காஹா வோ கூறினார்.

“கல்வி அமைச்சகம் 2022இல் ஆசிரியர்களின் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான காரணிகள் மற்றும் ஆசிரியர் தொழிலின் வளர்ச்சிக்கான அதன் தொடர்பு குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.

ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு வழிவகுக்கும் காரணங்கள் நிலையான நிதி நிலை, ஓய்வூதிய பலன்கள், சுகாதார பிரச்சினைகள், கல்விக் கொள்கையில் மாற்றங்கள் மற்றும் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை ஆகும்.

முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளதா, இந்த அதிகரிப்புக்கான காரணிகள் மற்றும் இதை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்த முழுமையான தீர்வு என்ன என்பதை அறிய விரும்பிய கோலா கிரை நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீஃப் அப்துல் ரஹ்மானுக்கு வோங் இவ்வாறு பதிலளித்தார்.

– பெர்னாமா


Pengarang :