NATIONAL

புதிய முதலீட்டாளர்களுடன் மைஏர்லைன் பேச்சுவார்த்தை

கோலாலம்பூர், ஏப் 29 – மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு முதலீட்டாளர் திடீரென பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ததைத் தொடர்ந்து சாத்தியமுள்ள புதிய முதலீட்டாளர்களுடன் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாக மைஏர்லைன் நிறுவனம் கூறியது.

அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கையை எடுப்பது உள்பட பல்வேறு சாத்தியங்கள் ஆராயப்பட்டு வருவதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அந்த விமான நிறுவனத்திற்கு புத்துயிரளிப்பதில் புதிய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக அது குறிப்பிட்டது.

தாங்கள் வான் போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்புகளுடன் தொடர்ந்து அணுக்கமாக செயல்பட்டு வருவதாகவும் லைசென்ஸ் பெறுவதற்கும் தொடர்ந்து சேவையில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக வான் போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்புகள் விதிக்கும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கடப்பாட்டை தாங்கள் கொண்டுள்ளதாகவும் மைஏர்லைன் அந்த அறிக்கையில் கூறியது.


Pengarang :