NATIONAL

கடந்தாண்டு நாட்டின் நீர் எல்லையில் புகுந்த 86 வெளிநாட்டுப் மீன்பிடி படகுகள் பிடிபட்டன

கோல நெருஸ், மார்ச் 1- கடந்தாண்டில் கடல் நாட்டின் எல்லைக்குள்
நுழைந்த 86 அந்நிய நாட்டு மீன்பிடி படகுகளை மலேசிய கடல்சார்
அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ.) பறிமுதல் செய்தது.

நாட்டுக்குச் சொந்தமான கடல் வளங்களைக் திருடுவதற்காக அந்நிய
நாட்டுப் படகுகள் அத்துமீறி நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும்
சம்பவங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக துணை உள்துறை அமைச்சர்
டத்தோஸ்ரீ டாக்டர் சம்சுல் அனுவார் நாசாரா கூறினார்.

நம்மிடம் உள்ள உபகரணங்கள் உள்ளிட்ட வளங்கள் மற்றும் கடல்சார்
அமலாக்க நிறுவன உறுப்பினர்களின் ஆற்றல் மீது எனக்கு நம்பிக்கை
உள்ளது. ஆகவே, நாட்டின் கடல் எல்லைக்குள் அந்நிய மீனவர்கள்
அத்துமீறி நுழையும் சம்பவங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்று அவர்
சொன்னார்.

நேற்று இங்குள்ள ட்ராபிரிட்ஜ் வளாகத்தில் 2024 பெர்க்காசா மெரிடைம்
விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.

அந்நிய நாட்டு படகுகளின் அத்துமீறல் தொடர்பான பத்து சம்பவங்கள்
திரங்கானுவில் பதிவு செய்யப்பட்டதாக கூறிய சம்சுல், இந்த முறியடிப்பு
நடவடிக்கையின் வாயிலாக ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி
மதிப்பிலான நாட்டின் கடல் வளங்கள் கொள்ளை போவது தடுக்கப்பட்டது
என்றார்.

இது தவிர இக்காலக்கட்டத்தில் 4,958 பரிசோதனைகள், 2,847 தேடுதல்
நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக 37 கைது
நடவடிக்கைகளை எம்.எம்.இ.ஏ. மேற்கொண்டது என்றும் அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :