SELANGOR

2030ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் மாற்றம் மாநிலத்தில் 750,000 புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்

ஷா ஆலம், மார்ச் 4: 5ஜி கவரேஜ் மூலம் ஏற்படும் டிஜிட்டல் மாற்றம் 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் 750,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாகும் என்று புதுமை கலாச்சாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஏறத்தாழ RM150 பில்லியனை அதிகரிக்க முடியும் என்று சிலாங்கூர் மாநில சட்டசபையின் அமர்வில் டாக்டர் ஃபஹ்மி நகா கூறினார்.

“5ஜி நெட்வொர்க்கை செயல்படுத்துவது மாநில அரசின் கொள்கைகளை வெளிப்படுத்தும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

“முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) கட்டமைப்பில் உள்ளபடி, தெற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பகுதி திட்டம் (IDRISS) மற்றும் சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பகுதி (சாப்டா) ஆகியவற்றின் எண்ணத்தை அடைவதில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் 5G நெட்வொர்க் எவ்வாறு வளர்ச்சிக்கு உதவுகிறது என்று ரவாங் சட்டமன்ற சுவா வெய் கியாட்டின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

டிசம்பர் 31 வரை, சிலாங்கூரில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 5G கவரேஜ் சதவீதம் 95.9 சதவீதத்தை எட்டியுள்ளது என ஃபஹ்மி தெரிவித்தார்.

“நாட்டின் 5G கவரேஜ் சதவீதம் 80.2 சதவீதமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், புக்கிட் மெலாவதியின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூராஸ்லி யாஹ்யாவின் கேள்விக்குப் பதிலளித்த ஃபஹ்மி,

2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு வரை, கோலா சிலாங்கூர் நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதியில் இணைய கவரேஜ் விகிதம் 99.95 சதவீதம் ஆக உள்ளது என்றார்.


Pengarang :