சுங்கை பூலோ வில்  சொந்த தொழில் செய்பவர்கள் உதவி வேண்டுமாயின்  தொகுதி அலுவலகத்தை நாடலாம்  டத்தோ ரமணன்  அழைப்பு

செய்தி. சு.சுப்பையா

சுங்கை.பூலோ.மார்ச்.8- சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் சொந்த தொழில் செய்பவர்களுக்கு உதவிகள் தேவைப்படுமாயின் சுபாங் ஸ்டார் எவனியுவில் உள்ள தனது அலுவலகத்தை நாடாலாம் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு கடன் உதவி தேவை என்றால் தேவையான உதவி செய்ய தயாராக உள்ளனர். முன்பு தெக்கூன் கடன் உதவி பெற வேண்டும் என்றால் 17 பாரங்கள் தேவை. ஆனால் தற்போது 4 பாரங்கள் மட்டும் போதும். சொந்த தொழில் செய்வதற்கான எஸ்.எஸ்.எம் பதிவு, வங்கி கணக்கறிக்கை, அடையாள அட்டை நகல், வியாபாரம் செய்யும் கடையின் படம் ஆகிய 4 ஆவணங்கள் போதுமானது என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆவணங்கள் இருக்குமாயின் தெக்கூன் மற்றும் அமனா இக்தியார் ராக்யாட்டிலும் கடன் மற்றும் உதவிகள் கிடைக்கும்.

தொகுதியில் உள்ளவர்களில் சொந்த தொழில் செய்யும் அனைவரும் இந்த உதவிகள் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

சுங்கை பூலோவில் உள்ள பொது மண்டபத்தில் 300 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்ல தேவைப்படும் பொருட்களை வழங்கினார்.

இவ்விழாவில் அவருடன் பேங் ராக்யாட் அதிகாரிகள் அவரது அதிகாரி டத்தோ அன்புமணி பாலன், தமிழ் செல்வம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்


Pengarang :