கோலாலம்பூர், மார்ச் 13 – பர்மிங்காமில் நடைபெறும் 2024 ஆண்டு அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் தேசிய முதல் நிலை ஜோடியான பயெர்லி டான்-எம். தினா மற்றும் தொழில்முறை கலப்பு இரட்டையர்களான கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமி ஜோடி நேற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
யூடிலிடா அரினா பர்மிங்காமில் நடைபெற்ற சூப்பர் 1000 போட்டியில் பியெர்லி-தினா, நாட்டின் மற்றொரு தொழில்முறை இரட்டையர்களான விவியன் ஹூ-லிம் சியூ சென் ஜோடியை 21-10, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் மலேசியாவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தனர்
இன்று பிற்பகலில் நடைபெறும் மற்றொரு தொடக்கச் சுற்றில் சீனாவின் முதல் நிலை வீரரான செங் கிங் சென்-ஜியா யி ஃபேன் மற்றும் தைவான் ஜோடியான ஹ்சு யா சிங்-லின் வான் சிங்கை தோற்கடிக்கும் மிகப்பெரிய பொறுப்பு பியெர்லி-தினா ஜோடிக்கு காத்திருக்கிறது.
இதற்கிடையில், சூன் ஹுவாட்-ஷெவோன் ஜோடியினர் தைவானின் கோ-சி சாங்-சிஹ் சென் லீயை 21-17, 26-24 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.