SELANGOR

சிறந்த வசதிகளுடன் கூடிய அசுன்தா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ மையம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14: சிறந்த வசதிகளுடன் கூடிய மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ மையத்தை வழங்க அசுன்தா மருத்துவமனையின் திட்டம் சரியான நடவடிக்கை என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த மையத்தில் மருந்தகம், பணம் செலுத்தும் கவுண்டர் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை அருகாமையில் உள்ளதால், நோயாளிகள், குறிப்பாக தாய்மார்கள், பரிசோதனைகளை மேற்கொள்வதை எளிதாக்குகிறது என ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

தற்போது ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ ஆக உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ மையம், கட்டணம் செலுத்தும் கவுண்டர், மருந்தகம், வாகன நிறுத்துமிட வசதிகளுடன் சிறப்பாக உள்ளது.

“இது ஒரு நல்ல முறையாகும் காரணம் நோயாளிகளுக்குச் சுலபமாக இருக்கும். ஏனெனில் அவர்கள் பல செயல்முறைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் என அசுந்தா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ மையத்தை திறந்து வைத்த பின்னர் அவர் கூறினார்.

இதற்கிடையில், பெண்கள், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்ததைத் தொடர்ந்து அதை ஒன் ஸ்டாப் சென்டராக மாற்றுவதன் மூலம் தனது தரப்பு முன்முயற்சி எடுத்துள்ளது என அசுந்தா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி வில்சன் சூ கூறினார்.


Pengarang :