SELANGOR

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க 200  உணவு அடுக்கு பாத்திரங்கள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 22: நேற்று ரவாங்கில் உள்ளன் ரம்ஜான் பஜாருக்கு வந்த பொதுமக்களுக்கு 200 உணவு அடுக்கு பாத்திரங்கள் செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) விநியோகித்தது.

ரம்ஜான் பஜாரில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக உணவுப் பாத்திரங்கள் விநியோகிக்கப்படுவதாக அதன் மக்கள் தொடர்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

“ரம்ஜான் பஜாரில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

“மேலும், இத்திட்டத்தின் மூலம் நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் மற்றும் வியாபாரிகள் உணவு பேக் செய்ய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது ஊக்குவிக்கப்படும். அதே நேரத்தில் வருகையாளர்கள் தங்கள் சொந்த உணவு பாத்திரங்களைக் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்,” என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. .

உணவுப் பாத்திரங்கள் விநியோகத்தை எம்பிஎஸ் துணைத் தலைவர் அடி பைசால் அகமட் தர்மிசி நடத்தி வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற பகுதி (சூன்) 15 கவுன்சிலர் ஆலிஸ் சூ ஃபூங் தை மற்றும் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.


Pengarang :