AMERIKA Syarikat (AS) memulakan saringan di tiga lapangan terbangnya untuk mengesan pengembara dari Wuhan, China, yang mungkin mengalami simptom wabak koronavirus baharu. – Foto AFP
MEDIA STATEMENTNATIONAL

பாப்புவா நியு கினியில் பூகம்பம்- இந்தோனேசியாவிலும் நில அதிர்வு

இஸ்தான்புல், மார்ச் 24 – பாப்புவா நியூ கினியில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ் ஜி.எஸ் ) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் அம்புந்தி நகரிலிருந்து வடகிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில் மையமிட்டிருந்தது.   அண்டை நாடுகளான இந்தோனேசியா மற்றும் சாலமன் தீவுகளில் தொடர்ச்சியான பூகம்பத்திற்குப் பிந்தைய  நில அதிர்வுகள்  உணரப்பட்டன என்று அனாடோலு ஏஜென்சி செய்தி நிறுவனம்  கூறியது.

முதல் நிலநடுக்கம் நிகழ்ந்த சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு 5.1 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் 5.2 ரிக்டர் அளவிலான அதிர்வு அப்பகுதியைத் தாக்கியது.

இந்தோனேசியாவின் கொரண்டலோ வட்டாரத்தில்  ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.   சாலமன் தீவுகளின் கிசோ மற்றும் இந்தோனேசியாவின் எண்டே ஆகியவை முறையே 5.1 மற்றும் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உண்டானது.

நிலத்தடியில் சுமார் 64 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பப்புவா நியூ கினி பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில்  அமைந்துள்ளது, அங்கு உலகின் பெரும்பாலான பூகம்பங்கள் மற்றும் எரிமலை குமுறல் பேரிடர்கள் நிகழ்கின்றன.

செப்டம்பர் 2022 இல் நாட்டைத் தாக்கிய 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 21 பேர் இறந்தனர்.


Pengarang :