SELANGOR

100 மாணவர்கள் விளையாட்டு உடைகள் மற்றும் புறப்பாட நடவடிக்கையின் சீருடைகளை நன்கொடையாகப் பெற்றனர்

ஷா ஆலம், மார்ச் 25: செந்தோசா தொகுதியில் உள்ள ஏழு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் விளையாட்டு உடைகள் மற்றும் புறப்பாட நடவடிக்கையின் சீருடைகளை நன்கொடையாகப் பெற்றனர்.

இந்த நன்கொடை குடும்பத்தின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்றும், இதனால் ஒவ்வொரு மாணவரும் விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் சீருடை இயக்கங்களில் பங்கேற்க முடியும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

“விளையாட்டு ஆடைகளை வாங்க முடியாத குடும்பங்கள் இன்னும் உள்ளன. அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு விளையாட்டு உடைகளை நன்கொடையாக வழங்கினோம்.

“ஒவ்வொரு மாணவருக்கும் பொருத்தமான விளையாட்டு உடைகள் மற்றும் சீருடைகள் கிடைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் தற்போதைய வெப்பமான வானிலை காரணமாக அவர்கள் பள்ளியில் விளையாட்டு உடைகளை அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்று டாக்டர் ஜி குணராஜ் முகநூலில் தெரிவித்துள்ளார்.

புக்கிட் திங்கி தேசிய பள்ளி, கிள்ளான் ஜெயா தேசிய பள்ளி, பெரும்புவான் சீனப்பள்ளி, ஹின்ஹுவா சீனப்பள்ளி. லாடாங் ஹைலேண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி, பத்து ஆம்பாட் தமிழ்ப்பள்ளி மற்றும் சிம்பாங் லிமா தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகள் இந்த நன்கொடையைப் பெற்றன.


Pengarang :