SELANGOR

பத்து தீகா தொகுதியில் மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு RM50,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 26: பத்து தீகா தொகுதியின் சமூக சேவை மையம் (பிகேஎம்) அப்பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு RM50,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

ரம்ஜான் மாதம் முழுவதும் இஸ்லாமிய நிறுவனங்களில் இஹ்யா திட்டத்தைத் நடத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் ஹரோன் கூறினார்.

“40க்கும் மேற்பட்ட மசூதிகள் மற்றும் சூராவ்கள் RM1,000 நன்கொடையாகப் பெற்றன. இன்னும் சில மசூதிகளிலிருந்து கூடுதல் உதவிக்காக விண்ணப்பங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், மேலும் அவ்வப்போது தேவைகளைக் கண்காணிக்கிறோம்.

“மசூதிகள் மற்றும் சூராவ்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் உணவு கூடைகள் வழங்குவதும் அடங்கும்” என்று கூறினார்.

இந்த ரம்ஜான் மாதம் முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அவற்றில் 2,000 பேர்களுக்கு, லம்போக் கஞ்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் மூலம் விநியோகிக்கப்படும்.

“மேலும், பத்து தீகா தொகுதியில் RM200 மதிப்புள்ள 850 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்களை ஜெயண்ட் கெமுனிங் உத்தாமா சூப்பர் மார்க்கெட்டில் இந்த வியாழன் அன்று விநியோகம் செய்யப்படும்” என்றும் அவர் கூறினார்.


Pengarang :