NATIONAL

மடாணி சிலாங்கூர் தொழில்முனைவோர் நிதி (டம்ஸ்)  திட்டத்தில் RM30,000 வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஏப் 2: மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மடாணி சிலாங்கூர் தொழில் முனைவோர் நிதி (டம்ஸ்)  திட்டத்தின் மூலம் RM30,000 வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

தொழில் முனைவோர் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க இந்த ஆண்டு மொத்தம் 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இந்த ஆண்டு, மல்டிமீடியா,  கலை, கலாச்சார பாரம்பரியம் சார்ந்த தொழில்துறை மற்றும்  படைப்பாற்றல் பொருளாதார துறைகளுக்கு இத்திட்டத்தை மாநில அரசு விரிவுபடுத்தியது.

“ஆர்வமுள்ள தொழில் முனைவோர் சிலாங்கூர் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த மாநிலத்தின் தொழில் முனைவோரின் வணிகங்களை இன்னும் மேம்படுத்த இந்த நிதி உதவட்டும்” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

கடந்த மாதம், சிறு தொழில் முனைவோர்கள் RM30,000 வரையிலான உதவியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்க இத்திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது.


Pengarang :