ANTARABANGSA

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஒக்கினாவாவில் சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ, ஏப் 3 – இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை, ஒக்கினாவாவின் தெற்கு மாகாணத்திற்கு அருகிலுள்ள கடலோரப் பகுதிகளுக்கு  வெளியேற்ற ஆலோசனையை ஜப்பான் வழங்கியது.

உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 3 மீட்டர் வரை சுனாமி ஏற்படும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தைவான் அருகே உள்ள கடலில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றான ஜப்பானில் இதுபோன்ற சம்பவம் ஏற்படுவது சகஜம் ஆகும். ஆறு அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவு நில நடுக்கங்களில் ஜப்பான் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், தைவானில், 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் அதன் தலைநகரான தைபேயைத் தாக்கியதாகத் தைவான் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வலுவான நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

– ரெய்ட்டர்ஸ்


Pengarang :